பாகுபலி-2 மாதிரி படம் இயக்க முடியாது... கண்டிப்பா ட்ரை பண்றேன்ப்பா' மகனுக்கு ஆறுதல் சொன்ன இயக்குனர்...

 
Published : May 08, 2017, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பாகுபலி-2 மாதிரி படம் இயக்க முடியாது... கண்டிப்பா ட்ரை பண்றேன்ப்பா' மகனுக்கு ஆறுதல் சொன்ன இயக்குனர்...

சுருக்கம்

cant able to do film like baahubali

பாகுபலி-2 மாதிரி ஒரு படம் பண்ணுப்பா என்று கேட்ட  மகனுக்கு அப்பாவால் பாகுபலி-2 மாதிரி படம் இயக்க முடியாது. ஆனால், கண்டிப்பா ட்ரை பண்றேன்ப்பா'என்று இயக்குனர் வசந்தபாலன் தனது மகனுக்கு பதில் அளித்துள்ளார்.

தற்போது எங்கு பார்த்தாலும் பாகுபலி-2 வை பற்றிய பேச்சு தான். இப்படத்தைப் பற்றி பேசாதவரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு புகழ் பெற்றுவிட்டது  பாகுபலி-2. 



ஹாலிவுட் படத்தின் பிரமாண்டத்தை அசரவைத்துள்ளது இந்தப்படம், ஒரு தென்னிந்தியப்படம் உலகம் முழுவதும் வசூலில் பின்னியெடுப்பதை பெருமைப்படும் விதத்தில் பாக்ஸ் ஆபிசில் முந்தைய வசூல் சாதனையை வீழ்த்தி புதிய சாதனையை எழுதியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முதல் நாள் வசூலில் இப்படம் பல சாதனைகளை முறியடிக்க தவறிய இப்படம், எந்திரன் ஒட்டு மொத்த வசூல் சாதனையை முறியடித்துவிட்டது.பல திரையரங்குகளில் இப்படம் தான் அதிக வசூலை தந்துள்ளதாக அவர்களே வெளியிட்டுள்ளனர். 



இப்படம் தமிழகம் முழுவதும் ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, தமிழகத்தில் இதுவரை வந்த படங்களிலேயே நேரடி தமிழ் படங்களின் வசூலை விட தெலுங்கு டப் படமான பாகுபலி-2 தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வசந்தபாலனின் மகனும் இதுமாதிரி ஒரு படம் பண்ணுப்பா என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அவர் 'அப்பாவால் பாகுபலி-2 மாதிரி படம் இயக்க முடியாது. ஆனால், கண்டிப்பா ட்ரை பண்றேன்ப்பா'என்று பதில் அளித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!