
பாகுபலி தான் பிரமாண்டமான முதல் படம் என சொல்ல முடியாது என்று பாகுபலி படம் பற்றிய தனது கருத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
"பாகுபலிக்கு முன்பே பல இயக்குனர்கள் இப்படி பிரமாண்டமாக முயற்சி செய்துள்ளனர்.
கோச்சடையான் படம் பாகுபலியாக இருந்திருக்கும், ஆனால் சிஜி, அனிமேஷன் சரியாக இல்லாததால் சரியாக ஓடவில்லை.
அதனால் பாகுபலி தான் பிரமாண்டமான முதல் படம் என சொல்ல முடியாது. அதற்கு முன் வந்த படங்கள் தோல்வியடைந்துவிட்டன.
ஆனால், பாகுபலி கொஞ்சம் லக்கி, அனைத்தும் சரியாக அமைந்ததால் பிரமாண்ட வெற்றியை சுவைக்க முடிந்தது" என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
அவரு சொல்றது சரிதான். கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த “சந்திரலேகா” படத்தை பற்றி கேட்டால் இப்போது இருக்கும் தாத்தா, பாட்டிகள் புட்டு புட்டு வைப்பர்.
சந்திரலேகாவுக்கு முன்னாடி பாகுபலி எல்லாம் பச்சா தான்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.