
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பின் கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துத்துக்கொண்டு உரையாற்றினார். இது குறித்து பலரும் அரசியலில் ரஜினிகாந்த் அடியெடுத்து வைக்க உள்ளதால் தற்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறினார்.
இப்படி பட்ட விவாதங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தாலும்,ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா...? மாட்டாரா...? என்பது மட்டும் பதில் தெரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில், அவரை தொடர்ந்து நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான கார்த்தி, தன்னுடைய ரசிகர்களை சென்னையில் இன்று சந்தித்தார்.
நடிகர் கார்த்தி முதல் முதலில் அமீர் இயக்கத்தில் நடித்த பருத்தி வீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனாது. இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். மேலும் ரசிகர்களால் ' கார்த்தி மக்கள் மன்றம்' என்கிற அமைப்பு தொடங்கப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு இன்றுடன் 10 வருடம் நிறைவடைகிறது இதனை சிறப்பிக்கும் விதமாக கார்த்தி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசினார்.
இந்த விழாவில் கார்த்தியின் ரசிகர்கள், இயக்குனர் ராஜு முருகன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.