ஹெலிகாப்டர் கூட வாங்கிகோங்க... தாறுமாறான கேள்வியால் தனுஷை தெறிக்கவிட்ட நீதிபதி! இவரும் மேல்முறையீடு செய்வாரா?

By manimegalai aFirst Published Aug 5, 2021, 12:10 PM IST
Highlights

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியம் அவரையும் சரமாரியான கேள்விகளால் விமர்சித்துள்ளதால் , இவரும் மேல் முறையீடு செய்வாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியம் அவரையும் சரமாரியான கேள்விகளால் விமர்சித்துள்ளதால் , இவரும் மேல் முறையீடு செய்வாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத வரியை செலுத்தினாலே சொகுசு காரை பதிவு செய்து கொள்ளலாம் என வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அந்த வழக்கு தற்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி. மேலும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷுக்கு பால் காரரை உதாரணம் காட்டி விமர்சனம் செய்துள்ளார் நீதிபதி.

சமீபத்தில் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த போது, "நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’என கண்டனம் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

பின்னர் விஜய் தரப்பில் இருந்து, இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மற்ற வேண்டும் என்று மனு அளிக்கட்டு, ஏற்கனவே 50 சதவீத வரி கட்டப்பட்டுவிட்ட நிலையில், மீதம் உள்ள வரியை கட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நீதிபதிகள் வார்த்தை கடுமையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு 25 லட்சம் ரூபாய் முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக  கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கொரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்தார்.  இதையடுத்து, விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கை முடித்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இவரை தொடர்ந்து இன்று தனுஷின் வரி விலக்கு மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் தனுஷையும் தாறுமாறாக விமர்சித்துள்ளார். 'நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள்,  ஆனால் செலுத்த வேண்டிய சரியாகவும் முழுமையாக செலுத்துங்கள். பால்காரர் உள்ளிட்ட ஏழைகள் கூட பெட்ரோலுக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்திகிறார்கள். செலுத்த முடியாது என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா? என்று காட்டமான கேள்விகளை எழுப்பினார். 

சோப்பு வாங்கினால் கூட வரி விதிக்கப்படுகிறது. அதற்கு எந்த சாமனிய மனிதனும் வரிவிலக்கு கேட்டு வழக்கு போடுவதில்லை... நீங்கள் ஹெலிகாப்டர் கூட வாங்கிகோங்க ஆன குறிபிட்ட காலத்திற்குள் வரியை கட்டுங்கள் என விஜய்யை விமர்சனம் செய்ததை விட, கூடுதல் வார்த்தைகளால் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனுஷுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல நடிகர், சூப்பர் ஸ்டாரின் மருமகன் என உயரிய அந்தஸ்தில் தனுஷ் இருப்பதால்... இவரும் மேல் முறையீடு செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பும், பரபரப்பும் தற்போது கோலிவுட் திரையுலகை தொற்றிக்கொண்டுள்ளது.

 

 

click me!