’விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் உம்முன்னு, கம்முன்னு இருப்பது ஏன்?’...குமுறும் ரசிகர்கள்

By sathish kFirst Published Nov 8, 2018, 4:25 PM IST
Highlights

ஊரெங்கும் விஜய் மற்றும்‘சர்கார்’ பட பேனர்கள் கிழிப்பு.  படம் ஓடும் தியேட்டர்களுக்குப் போய் நிம்மதியாகப் படம் பார்க்கமுடியாத நிலை. அடிமட்டத்தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை. இதற்கெல்லாம் ஒரு பதில் வார்த்தை கூட பேசாமல் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் அந்த ஒருவிரல் புரட்சியாளர்கள் என்ற கேள்வி பொதுவானவர்கள் மத்தியில் மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் மத்தியிலும் எழ ஆரம்பித்துள்ளது.

படம் ரிலீஸான மூன்றாவது நாளான இன்று, சர்காருக்கு விளம்பரம் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. படம் குறித்தும் இயக்குநர் முருகதாஸ்,நடிகர் விஜய் குறித்தும் அமைச்சர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் நிமிடத்துக்கு நிமிடம் தடித்து வருகின்றன. படத்தை மறு சென்சார் பண்ணமுடியுமா என்று சட்ட அமைச்சர் ஆலோசனைகள் நடத்துகிறார். காட்சிகளை ரத்து செய்யச்சொல்லும் போராட்டக்காரர்களுக்கு காவல்துறையின் அரவணைப்பு.

நிலைமை இப்படி இருக்க, படத்துக்கு பேராபத்து என்று தெரிந்திருந்தும் அனல் தெறிக்க வசனங்கள் எழுதிய இயக்குநர் முருகதாஸும், அதை கழுத்து நரம்பு விடைக்க பேசிய ஒருவிரல் புரட்சியாளர் விஜய்யும் எதிர்கருத்து எதுவும் பேசாமல் கம்முன்னு இருப்பது ஏன் என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. ‘வெளிய வாங்க பாஸ். படத்துல காட்டுன வீரத்துல ஒரே ஒரு பர்சண்டையாவது நேர்ல காட்டுங்க’என்கிறார்கள் சாமானியர்கள்.

click me!