
கடந்த ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்து, பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ எத்தனையாவது முறை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேற்று மீண்டும் ஒருமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் லேட்டஸ்ட் அறிவிப்பின்படி இப்படம் ஜோதிகாவின் ’ஜாக்பாட்’படத்துடன் மோதுகிறது.
வரும் 26ம் தேதி வெள்ளியன்று நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’,’சந்தானத்தின் ‘அக்கியூஸ்ட் நம்பர் ஒன்’,விஜய் சேதுபதி தயாரித்து வெளியிடும் ‘சென்னை பழனி மார்ஸ்’,விஜய தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’, சமுத்திரக்கனி நடித்துள்ள ‘கொளஞ்சி’,’நுங்கம்பாக்கம்’,’ஆறடி’ஆகிய படங்கள் ரிலீஸாவதாக இருந்தன. இந்த நிலையில் இப்பட்டியலில் இருந்து ‘கொலையுதிர்காலம்’ வெளியேறி ஒருவாரம் தள்ளி ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’படத்துடன் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஸோலே ஹீரோயின் சப்ஜெக்ட்டுகளில் அதிகம் நடித்து வருபவர்கள் நயன்தாராவும் ஜோதிகாவும் மட்டுமே. நயன் ஒரு படத்துக்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஜோதிகா சொந்தக் கம்பெனி தவிர வேறு எதிலும் பெரும்பாலும் நடிப்பதில்லை என்பதால் அவரது சம்பளம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் இருவரின் படமும் ஒரே தேதியில் ரிலீஸாவதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக செல்வாக்கு யாருக்கு என்று தெரிந்துகொள்ள இந்த மோதல் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.