ஸ்ரீதேவி மர்ம குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வாரம் கழித்து வாயத் திறந்த போனி கபூர்...

By Muthurama LingamFirst Published Jul 15, 2019, 5:47 PM IST
Highlights

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கேரள டிஜிபி புகார் சொல்லியிருந்த நிலையில் அதற்கு ஒரு வாரம் கழித்து மீண்டும் உப்பு சப்பில்லாத ஏற்கனவே சொன்ன பதில்களையே திரும்பவும் கூறியிருக்கிறார் அவரது கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர்.
 


நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கேரள டிஜிபி புகார் சொல்லியிருந்த நிலையில் அதற்கு ஒரு வாரம் கழித்து மீண்டும் உப்பு சப்பில்லாத ஏற்கனவே சொன்ன பதில்களையே திரும்பவும் கூறியிருக்கிறார் அவரது கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர்.

ஒரு வருடம் கடந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி 1 அடி உயரமே தண்ணீர் கொண்ட குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரை யாரோ தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்திருக்க கூடும் என்றும் தனது நண்பரும் தடயவியல் நிபுணருமான உமாடாதன் தெரிவித்ததாக கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் கருத்து வெளியிட்டிருந்தார்.

மேலும் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்றும் ஒருவர் எவ்வளவு தான் மது அருந்தியிருந்தாலும் 1 அடி உயரம் தண்ணீர் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை என்றும் சர்ச்சையை கிளப்பினார். தற்போது தடயவியல் நிபுணர் உமாடாதன் உயிரோடு இல்லாத நிலையில் கேரள டிஜிபியின் கருத்து போனிகபூர் குடும்பத்தினரை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.

இந்த கருத்து வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் போனிகபூர் தற்போது மவுனம் கலைத்துள்ளார். நடிகர் அஜீத்குமாரை வைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துவரும் போனிகபூரிடம் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்ட போது, இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற கதைகளுக்கு தான் பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் இது போன்ற கதைகள் தொடர்ந்து கூறப்பட்டு வருவதாகவும் இவை அவர்களின் கற்பனையின் வெளிப்பாடு என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் போனிகபூர் தயாரித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் வெளியீட்டு உரிமையை குறைந்த விலைக்கு கைப்பற்றுவதற்காக, முக்கிய சினிமா வினியோகஸ்தர்கள் சிலர் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு படத்தை மற்ற நிறுவனங்களை வாங்க விடாமல் தடுத்து வரும் நிலையில் மனைவி ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையால் போனிகபூர் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
 

click me!