“உங்களை எல்லாம் அடக்க ராணுவம் வரணும்”... லாக்டவுனை மதிக்காத கோமாளிகளை வெளுத்து வாங்கிய சல்மான் கான்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 17, 2020, 05:46 PM IST
“உங்களை எல்லாம் அடக்க ராணுவம் வரணும்”...  லாக்டவுனை மதிக்காத   கோமாளிகளை வெளுத்து வாங்கிய சல்மான் கான்...!

சுருக்கம்

சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடம் ஒளிபரப்பாக கூடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா லாக்டவுனை மதிக்காதவர்களை கோமாளிகள் என்று கடுமையாக சாடியுள்ளார். 

இந்தியாவில் இதுவரை 13 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 1007 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றை தடுக்கும் விதமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

கொடிய வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் எதையும் மதிக்காத பொதுமக்களில் சிலர் ஜாலியாக பைக்கில் உலா வருவதை பார்க்க முடிகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமல்லாது டைம் பாஸ் செய்வதற்காக வெளியில் சுற்றும் இவர்களை பார்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கடுமையாக சாடியுள்ளார். 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடம் ஒளிபரப்பாக கூடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள், உங்களது குடும்பத்தை சாகடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். உங்களுடைய உயிரை காப்பாற்ற போராடும் காவல்துறையினர் மீது கல் வீசுகிறீர்கள். சீனாவில் உருவான கிருமி இப்போது அங்கு இல்லை... ஆனால் சில கோமாளிகளால் இந்தியா மக்கள் அனைவரும் நீண்ட காலம் வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவம் கூட வரவழைக்கப்ட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?