அடடே... தல அஜித்தை இமிட்டேட் செய்த சல்மான் கான்... வைரலாகும் வீடியோ....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 22, 2019, 05:25 PM IST
அடடே... தல அஜித்தை இமிட்டேட் செய்த சல்மான் கான்... வைரலாகும் வீடியோ....!

சுருக்கம்

அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. பாலிவுட் ஸ்டார் சல்மான் கான், அஜித்தின் பேமஸ் காட்சியை இமிடேட் செய்தது அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.  

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ அந்தஸ்து பெற்றவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். தல அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதேபோல் பாலிவுட்டில் முன்னணி கான்களில் ஒருவராக திகழ்பவர் சல்மான் கான். இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகர். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடித்த "தபாங் 3" திரைப்படம் தமிழில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

அந்த படத்தின் புரோமோஷனுக்காக தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனா அஜித்தின் படத்தை காட்டிய போது, சிறிதும் யோசிக்காமல் டொக், டொக் என வாலி படத்தில் அஜித் செய்த ஸ்டலை அச்சு அசலாக செய்து காண்பித்த சல்மான் கான், வாலி படம் ரொம்ப நல்ல படம் என்று புகழ்ந்து தள்ளினார். 

அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. பாலிவுட் ஸ்டார் சல்மான் கான், அஜித்தின் பேமஸ் காட்சியை இமிடேட் செய்தது அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.  அஜித்திற்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்த வாலி திரைப்படம், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது