சாவிலும் பாகுபாடா?... ரிஷி கபூருக்கு கூடிய பாலிவுட் பிரபலங்கள் இர்ஃபான் கானை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே...!

By manimegalai aFirst Published Apr 30, 2020, 6:26 PM IST
Highlights

பாலிவுட் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்த நடிகர் இர்ஃபான் கான், நேற்று புற்றுநோய் காரணமாக, மரணமடைந்த நிலையில், அவரை தொடர்ந்து இன்று காலை 5 :30  மணிக்கு, பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரும் புற்று நோய் பாதிப்பு காரணமாக இறந்தார்.
 

பாலிவுட் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்த நடிகர் இர்ஃபான் கான், நேற்று புற்றுநோய் காரணமாக, மரணமடைந்த நிலையில், அவரை தொடர்ந்து இன்று காலை 5 :30  மணிக்கு, பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரும் புற்று நோய் பாதிப்பு காரணமாக இறந்தார்.

மேலும் செய்திகள்: ரிஷி கபூர் இறுதி அஞ்சலி! சமூக விலகலை காற்றில் பறக்க விட்டு ஒன்று கூடிய பாலிவுட் பிரபலங்கள்! Exclusive போட்டோஸ்
 

இவர்கள் இருவரின் மறைவும், பாலிவுட் திரையுலகினர் மட்டும் இன்றி, அணைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகமாக்கியது. 

இர்ஃபான் கான்:

பல்வேறு போராட்டங்களை கடந்து பாலிவுட் திரையுலகில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி, முன்னணி நடிகராக உயர்ந்தவர் இர்ஃபான் கான். குறிப்பாக, பல முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதைகளில் கூட சவாலாக நடித்து ஜெயித்து காட்டியவர், பிரபல நடிகர் இர்ஃபான் கான். 

பாலிவுட் திரையுலகை கடந்து, ஹாலிவுட் திரைத்துறையினர் தங்களது படங்களில் நடித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் இந்திய நடிகர்களில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் இவர் என்றும் கூறலாம். ஜுராசிக் வேர்ல்ட், லைப் ஆப்  பை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் இருக்கு ரசிகர்கள் உண்டு.

மேலும் செய்திகள்: ரிஷி கபூருக்கு அஞ்சலி செலுத்த காஸ்ட்லீ காரில் படையெடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்! Exclusive புகைப்பட தொகுப்பு
 

 2018ம் ஆண்டு முதலே கேன்சருடன் போராடி வந்த இர்ஃபான் கான் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் சென்ற இர்ஃபான் கான், கொரோனா லாக்டவுன் காரணமாக திடீரென அங்கு சிக்கிக்கொண்டார். அப்போது அவரது அம்மா சயீதா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட இர்ஃபான் கான் உடனடியாக இந்தியா திரும்ப முயன்றாலும் லாக்டவுனால் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்தது. அதனால் நாடு திரும்ப முடியாத இர்ஃபான் கான், தனது அம்மாவின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்து கதற வேண்டிய சோக சம்பவம் அரங்கேறியது. 

மேலும் செய்திகள்: நடிகை ஜோதிகாவை கொதித்தெழ வைத்த தஞ்சை மருத்துவமனை... இப்படியெல்லாம் நடந்தால் கேள்வி கேட்கமாட்டார்களா?
 

இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இன்றி 54 வயதிலேயே மரணித்தார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த இவருடைய இறுதி ஊர்வலத்தில், ஊரடங்கு காரணமாக மொத்தம் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் ஓரிரண்டு பேர் மட்டுமே பிரபலங்கள் என கூறப்படுகிறது.

ரிஷி கபூர்:

இர்ஃபான் இறந்த சோகம் கூட இன்னும் மனதை விட்டு நீங்காத நிலையில், பாலிவுட் திரையுலகின் மற்றொரு முன்னணி பழம்பெரும் நடிகர், ரிஷி கபூர் உயிரிழந்தார். 

மேலும் செய்திகள்: மாமனார் மரண செய்தியை கேட்டு... அவசர அவரசமாக மருத்துவமனைக்கு ஓடி வந்த மருமகள் ஆலியா பட்..!
 

இவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு, புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நியூ யார்க்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். பின் உடல்நலம் தெரியதால், செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார். 

இந்நிலையில் 29 ஆம் தேதி இவருடைய உடல்நிலை மோசமானதால், மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். இன்றே இவருடைய இறுதி ஊர்வலமும் நடைபெறுகிறது,.

இதனால், கொரோனா பாதிப்பு பற்றி கூட கவலை படாமல், பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும், தொழிலதிபர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, ரிஷி கபூருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இருவரும் திறமையான நடிகர்கள் என்கிற கருத்தில் ரசிகர்களுக்கு எந்த மாற்றமும் இல்லாத போது... பாலிவுட் பிரபலங்கள் ஏன் மரணத்தில் கலந்து கொள்வதில் கூட இப்படி ஒரு பாகுபாடு பார்க்கிறார்கள் என்பது தான்...?

click me!