
கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீண்டும் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா கரிகாலன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஒரு முக்கிய போலீஸ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார்.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ரஞ்சித் மற்றும் ரஜினியின் கூட்டணி காலா கரிகாலன் தயாராகிறது. இது படம் ரஜினியின் 164வது படம். இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி, சமுத்ரகனி உள்பட பலர் நடித்துவருகின்றனர்.
கபாலி படத்தில் மலேசிய தமிழர்கள் குறித்து, கதை வடிவமைக்கப்பட்டது. அதேபோல் காலா கரிகாலனில் மும்பை வாழ் தமிழர்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு உதவும் ‘டான்’ கேரக்டரில் நடித்து வருகிறார் ரஜினி.
இந்நிலையில் சிங்கம் ரிட்டர்ன்ஸ், தாபங் 2 ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி, காலா கரிகாலனில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருகிறார்.
இதுகுறித்து, பங்கஜ் திரிபாதி கூறுகையில், எனக்கு போலீஸ் கதாபாத்திரம் சில சமயத்தில் நெகட்டிவ்வாக இருக்கும். அதற்காக வில்லன் கேர்க்டர் என முடிவு செய்ய கூடாது. எனது கேரக்டர், மக்களுக்கு பிடிக்கும். அவர்கள், அதை ஏற்று கொள்வார்கள் என்றார்.
மேலும் இந்த படத்தில் அம்பேத்கர் குறித்த காட்சிகள் இடம்பெறுவதாகவும் ‘அம்பேத்கர்’ கதாபத்திரத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் வயதான கெட்டப்பில் நடிக்கும் ரஜினியின் சிறு வயது ‘கரிகாலனாக’ ரஜினியின் மருகமனும் இந்த படத் தயாரிபாளருமான தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மே 28 ல் மும்பை தாராவியில் தொடங்கிய படிப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் எடுக்க எடுக்கப்பட்ட காட்சி, படக்குழுவில் இருந்த மர்மநபர்கள் வெளியிட்டனர். இதனால், தற்போது, படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருக்கிறது.
இதற்காக பூந்தமல்லி அருகே இடத்தை தயார் செய்து, மும்பை போலவே செட் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் இங்கு படப்பிடிப்பு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.