
லோகேஷ் கனகராஜ் கோவையை சேர்ந்தவர், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இவருடைய புகழை இந்திய அளவில் பிரபலமாக்கியது.
தற்பொழுது தளபதி விஜய் அவர்களை கொண்டு லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இந்திய திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளை லோகேஷ் கனகராஜ் மேற்கொண்டு வருகிறார்.
அதிர்ச்சி... சார்லி சாப்ளினின் மகள் ஜோசஃபின் மரணம்!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார் லோகேஷ் கனகராஜ். அப்பொழுது அவரிடம் விருது பெற வந்த ஒரு மாணவி, அவருடைய காலில் விழுந்த நிலையில், அவர் சட்டென்று கோபப்பட்டு அந்த மாணவரிடம் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார்.
இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோவை கோடிட்டு பேசியுளளார் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்த மாணவர்களை 2K Boomers என்று கூறிய அவர், "லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அந்த மாணவியை கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தின் உள்ளே பிரமோஷனுக்காக திரைப்படக் கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை, இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறபோகிறதோ" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.