
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் சரி, அறிமுக நடிகரின் படங்கள் ரிலீசானாலும் இருந்தாலும் சரி, அவர்களது படங்களை பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து யூடியூபில் வீடியோ போட்டு பாப்புலர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். இவர் அண்மையில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான ‘ஆன்டி இண்டியன்’என்கிற படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜாவே வியந்து பாராட்டினார். ஆனால் ரசிகர்களிம் இந்த படம் வரவேற்பை பெறவில்லை.
இயக்குனர் ஆன போதும் தனது விமர்சகர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை விமர்சிப்பதனால் இவருக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாத ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சகர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் ப்ளூ சட்டை, குறிப்பாக அஜித்தை உருவ கேலி செய்து இவர் பேசியதற்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியது. சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித்தை மீண்டும் சாடி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். நடிகர் அஜித் இங்கிலாந்து நாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்று வெளியாகிய நிலையில், அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அவர் நடித்த படத்துக்கான இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன்களில் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் வருஷத்துக்கு 365 போட்டோ வருது. ஏன்னா ஏகே-வுக்கு பப்ளிசிட்டி பிடிக்காது. அவருக்கு தெரியாம/அனுமதி இல்லாம போட்டோ எடுத்து போடறாங்க. நம்புங்கண்ணே.. நம்புங்க” என கிண்டலடித்துள்ளார். இதைப்பார்த்த கோபமடைந்த அஜித் ரசிகர்கள் கமெண்டில் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Ajith : ரூ.5 கோடி மதிப்புள்ள ஆடம்பர காரில் அஜித் கொடுத்த கெத்து போஸ்... வைரலாகும் ஏகே-வின் லண்டன் கிளிக்ஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.