தேர்தல் நாளில் கறுப்பு சிவப்பு குறியீடு..! டார்கெட் செய்யப்படும் அஜித்..! பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Apr 23, 2021, 12:12 PM IST
Highlights

நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணின் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சி அரசியல் இருக்கும் என்று தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணின் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சி அரசியல் இருக்கும் என்று தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நாளன்று சென்னை திருவான்மியூரில் முதல் நபராக சென்று நடிகர் அஜித் வாக்கினை பதிவு செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த முகக்கவசம் திமுகவினரின் கவனத்தை ஈர்த்தது. பொதுவாக மாஸ்க் என்றால் வெள்ளை அல்லது இளநீல நிறத்தில் இருக்கும். ஆனால் அன்றைய தினம் அஜித் மிகவும் வித்தியாசமாக கறுப்பு சிவப்பு நிற முகக்கவசத்தில் வந்திருந்தார். இது திமுகவிற்கு ஆதரவாக தனது ரசிகர்களை வாக்களிக்க அஜித் மறைமுகமாக குறியீடு மூலம் உணர்த்துவதாக திமுகவினரால் பரப்பப்பட்டது. மேலும் திமுக ஆதரவு மனநிலை கொண்ட நடிகர் பொன்வண்ணனும் கூட கறுப்பு சிவ மாஸ்குடன் அஜித் வந்ததை தெரிவிக்கும் வகையில் ஒரு ஓவியம் வரைந்து வெளியிட்டார்.

சமூக வலைதளங்களில் இந்த விஷயம் விவாதப் பொருள் ஆகியிருந்தாலும் அஜித் தரப்பு இதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை அப்பலோவில் கோ ஆர்டினேட்டராக பணிபுரிந்து வந்த பர்சானா எனும் பெண் கடந்த மே மாதம் அங்கு வந்திருந்த அஜித் – ஷாலினி ஜோடியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து அஜித் மற்றும் ஷாலினிக்கு கொரோனா என தகவல் பரவியது. இதனால் அதிருப்தி அடைந்த அஜித் தரப்பு, சிகிச்சைக்கு வந்த தங்களை மருத்துவமனையில் பணியாற்றும் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டதாக புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் வீடியோ எடுத்தது பர்சானா என தெரியவந்த காரணத்தினால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நடிகர் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு நடந்ததற்கு மன்னிப்பு கோரினார். இதனை அடுத்து அப்பலோ மருத்துவமனை மறுபடியும் பர்சானாவை வேலைக்கு சேர்த்துக் கொண்டது. ஆனால் சில நாட்களில் பர்சானா மீண்டும் வேலை இழந்தார். இதற்கு காரணம் அஜித் தரப்பு தான் என்று அவர் மறுபடியும் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டுள்ளார். மேலும் அஜித் மனைவி ஷாலினியிடமும் பேசியுள்ளார்.

ஆனால் கொரோனா கால ஆட்குறைப்பு நடவடிக்கையாகவே பர்சானாவை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக ஷாலினியிடம் அப்பலோ கூறியுள்ளது. இதனை அடுத்து பர்சானா பலமுறை அஜித் தரப்பை தொடர்பு கொண்டும் இழந்த வேலையை திரும்ப பெற முடியவில்லை. ஒரு கட்டத்தில் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா தனக்கு மறுபடியும் வேலை வாங்கித் தருவதாகவும், அஜித்தை வீடியோ எடுத்து வெளியிட்ட காரணத்தினால் வேலையை இழக்க நேரிட்டதால் தனது குழந்தைகள் படிப்புச் செலலவுக்கு அஜித்திடம் கூறி உதவச் சொல்வதாகவும் வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் அதனை நிறைவேற்றவில்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையம் சென்றுள்ளார் பர்சானா.

இதனிடையே பர்சானா காவல் நிலையம் சென்றதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் அஜித்தை வீடியோ எடுத்ததால் ஒரு பெண்ணிற்கு வேலையே சென்றுவிட்டது என்று ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக ஒரு பீஆர்ஓ தரப்பில் இருந்து அனைத்து ஊடகங்களின் செய்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டதுன், ஆடியோ ஆதாரம், வாட்ஸ்ஆப் ஆதாரம் போன்றவையும் இரவோடு இரவாக வழங்கப்பட்டன. இவை அனைத்துமே அஜித் இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

அதாவது தேர்தல் நாளில் அஜித் கறுப்பு சிவப்பு குறியீடோடு வந்ததாக தகவல்கள் பரவிய நிலையில் அதற்கு அஜித் தரப்பில் இருந்து அன்றைய தினம் எவ்வித மறுப்பும் வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அஜித்திற்கு இனி வரப்போகும் நெருக்கடிகளுக்கு முன்னோட்டம் தான் இந்த பர்சானா விவகாரம் என்கிறார்கள்.

click me!