வருமான வரித்துறை விட்டாலும், விடாமல் துரத்தும் பாஜக... விஜய்க்கு தொடரும் நெருக்கடி..!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 7, 2020, 5:59 PM IST
Highlights

அப்போது சுரங்கத்தின் முன்பு குவிந்த பாஜக தொண்டர்கள், விஜய் பட ஷூட்டிங்கை நிறுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

"பிகில்" பட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வருமான வரிச்சோதனை நேற்று இரவோடு நிறைவடைந்தது. விஜய் வீட்டில் இருந்து சல்லிக்காசு கூட கிடைக்காததால், இரண்டு நாட்களாக சல்லடை போட்டு தேடிய வருமான வரித்துறையினர் வந்த வழியே திரும்பிச்சென்றுள்ளனர். இது எல்லாம் மாஸ்டர் படத்துக்கு கிடைச்ச புரோமோஷன் என்பது போல், விஜய் சத்தமே இல்லாமல் நெய்வேலி ஷூட்டிங்கிற்கு திரும்பிவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.  

இதையும் படிங்க: 

இதற்கு முன்னதாக விஜய் - விஜய்சேதுபதி இடையிலான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது தான் வருமான வரித்துறையினர் இடையில் புகுந்தனர். விஜய்யிடம் சம்மன் கொடுத்து சென்னை அழைத்து வந்து விசாரணையும் நடத்தினர். தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விஜய் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதால், விட்டுப்போன சண்டை காட்சியை லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஷூட் செய்து கொண்டிருந்தார். 

10 Cadres protest against administration for granting permission for film shooting in the lignite mining area. 's movie crew have already obtained all requisite permission for the shooting inside NLC for 10days and paid 2.5 lakh for renting the area. pic.twitter.com/nIxHJ3uT5S

— Mugilan Chandrakumar (@Mugilan__C)

இதையும் படிங்க: ஐ.டி.ரெய்டை பங்கமாக கலாய்த்த தல அஜித்... என்றோ நடந்ததை இன்று வைரலாக்கும் நெட்டிசன்கள்...!

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யின் இரண்டாவது சுரங்கத்தில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அப்போது சுரங்கத்தின் முன்பு குவிந்த பாஜக தொண்டர்கள், விஜய் பட ஷூட்டிங்கை நிறுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பாதுகாக்கப்பட்ட இடமான என்.எல்.சி. சுரங்கத்திற்குள் சினிமா ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

click me!