தமிழ் சினிமாத் துறையை வளைத்துப்போட பாஜக போடும் பலே திட்டம்..!! அதிர்ச்சியில் உறைந்துபோன எதிர்கட்சிகள்..!!

Published : Nov 26, 2019, 11:17 AM IST
தமிழ் சினிமாத் துறையை வளைத்துப்போட பாஜக போடும் பலே திட்டம்..!! அதிர்ச்சியில் உறைந்துபோன எதிர்கட்சிகள்..!!

சுருக்கம்

இந்நிலையில் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடையும் என தெரிகிறது. நட்சத்திர கலை விழாவில் மோடி பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக பாஜகவினர் கூறுகின்றனர்.  

தமிழ்நாட்டில் காலூன்ற போராடி வரும் பாஜக அதை சினிமா பிரபலங்களை வைத்து சாதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  எந்த மாநிலத்துக்கும் இல்லாத பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்றால் அது  சினிமாவின் மீது தமிழக மக்களுக்கு இருக்கிற ஈர்ப்பேயாகும்,  அதாவது அரசியலில் சினிமாவுக்கு இருக்கும் தாக்கத்தை உணர்ந்து நட்சத்திர கலைவிழா ஒன்றை சென்னையில் நடத்த மோடியின் நம்பிக்கைக்குரியவர் களில் ஒருவராவரும்,  வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த வருமான பிரித்வி என்பவர் இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

அதாவது சினிமா ஸ்டார்கள் சங்கமிக்கும் விழாவை நடத்தி அதில் பிரதமர் மோடியை கலந்து கொள்வதன் மூலம்  தமிழக மக்கள் மத்தியில் பாஜகவை பதிய வைக்க முடியும் என பாஜக திட்டமிட்டுள்ளது.  எனவே விரைவில் இசைஞானி இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா என்ற பெயரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரைப்பட உலகத்தையும் கலந்து கொள்ள  வைப்பதற்கான கான்செப்ட் தற்போது ரெடி என தகவல்கள் கசிந்துள்ளது.  மோடியும் ஒப்புதல் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடையும் என தெரிகிறது. நட்சத்திர கலை விழாவில் மோடி பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக பாஜகவினர் கூறுகின்றனர். 

அதே நேரத்தில் கலைநிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்ள ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது . அத்துடன் நடிகர்களை கவர்ந்து விட்டாள் அதன்மூலம் எளிதாக தமிழகத்தில் கால் பதித்து விட முடியுமென பாஜக யோசிக்கிறது. பாஜகவின் இந்த அதிரடி திட்டத்தை தெரிந்துகொண்ட எதிர்க்கட்சியினர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்