அஜர்பைஜான் நாட்டில் 'பிரேமம்' நாயகியுடன் அதர்வா! எதற்காகச் சென்றுள்ளனர் தெரியுமா?

Published : Nov 25, 2019, 11:59 PM IST
அஜர்பைஜான் நாட்டில் 'பிரேமம்' நாயகியுடன் அதர்வா! எதற்காகச் சென்றுள்ளனர் தெரியுமா?

சுருக்கம்

'பூமராங்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் நடிகர் அதர்வா, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு நானி, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின்  ரீமேக்தான் இந்தப் படம்.   

இதில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரனை நடிக்க வைத்து சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்திவந்தார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
இடையில், சந்தானத்தின் புதிய படத்தில் ஆர்.கண்ணன் கவனம் செலுத்தியதால், அதர்வாவின் படம் பாதியில் நின்றது. 

தற்போது, சந்தானத்தின் படத்தை இயக்கி முடித்த கையுடன் அடுத்து அதர்வா படத்தை ஆரம்பித்துள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகிறது. 

இதில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மலையாளத்தில் 'பிரேமம்' படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தனுஷின் 'கொடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 

அதன்பின்னர், மலையாளம், தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் அதர்வாவுடன் இணைந்து ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!