
தல அஜித்:
தல அஜித், எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், திரையுலகில் காலடி பதித்து, பல்வேறு பிரச்சனைகளை கடந்து, முன்னணி ஹீரோ என்கிற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளவர். மேலும் சிறந்த ஹீரோ என்பதையும் தாண்டி நல்ல மனிதராக திரையுலக பிரபலங்களால் அறியப்பட்டவர்.
விளையாட்டுகளில் ஆர்வம்:
தல அஜித் எந்த அளவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவரே அதே போல், பைக் ரேஸிங், கார் ரேஸிங் போன்ற விளையாட்டுகளிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். மேலும் அதை மிஞ்சும் அளவில் சமீப காலமாக போட்டோ கிராபி, மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
எங்கும் செல்லாத தல:
அஜித், கடந்த சில வருடங்களாகவே வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். குறிப்பாக குடும்பத்திற்கு மிகவும் தேவையானவர்கள் என்றால் மட்டுமே மனைவி ஷாலினியோடு செல்கிறார். மற்றபடி, பட விழாக்கள், மற்றும் வெளி நிகழ்ச்சிகளில் அறவே கலந்து கொள்வது இல்லை.
ரேஸர் வெளியிட்ட தகவல்:
இந்நிலையில் தல அஜித்துடன் பைக் ரேஸில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான, அலிஷா அப்துல்லா தல அஜித் ஏன், வெளியில் எங்கும் செல்வது இல்லை என்ற ரகசியத்தை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், தல அஜித் எங்கு சென்றாலும் மக்கள் அவரை நகரவே விட மாட்டார்கள். கூட்டம் கூடி விடும். இதனை நானே பல முறை பார்த்துள்ளேன். அதனால் தான் அவர் எங்குமே வெளியில் செல்வதில்லை என கூறி... அஜித் ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.