’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...

Published : Oct 22, 2019, 02:51 PM ISTUpdated : Oct 22, 2019, 02:52 PM IST
’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...

சுருக்கம்

படம் துவங்கியதிலிருந்தே ‘பிகில்’படம் தொடர்பான அப்டேட்களை பொறுமையாகவும் சுவாரசியமாகவும் வழங்கி வந்தவர் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகளான அர்ச்சனா. இந்நிலையில் படம் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் ரசிகர்களிடம் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் அவர்களது கேள்விக்கு பதிலளிக்கவிருப்பதாக அறிவித்து இன்று காலை 10.30 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் தோன்றினார். 

விஜய், அட்லி கூட்டணியின் ‘பிகில்’படம் ரிலீஸாக இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவ் நிகழ்ச்சி மூலம் பதிலளித்தார் நிர்வாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. அப்போது அஜீத் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் பதிலளித்தார் அவர்.

படம் துவங்கியதிலிருந்தே ‘பிகில்’படம் தொடர்பான அப்டேட்களை பொறுமையாகவும் சுவாரசியமாகவும் வழங்கி வந்தவர் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகளான அர்ச்சனா. இந்நிலையில் படம் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் ரசிகர்களிடம் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் அவர்களது கேள்விக்கு பதிலளிக்கவிருப்பதாக அறிவித்து இன்று காலை 10.30 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் தோன்றினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதிலளித்த அவர்,...பிகில் படத்திற்கான டிக்கெட்கள் இன்று மாலையிலிருந்து புக் செய்யப்படும் என்றும் படத்திற்கான ப்ரோமோ காட்சிகள் இன்று மாலையே வெளியிடப்படும் என்றும் கூறினார். மேலும் படத்திற்கான தீம் இசையை வெளியிடுவீர்களா என்று கேட்டதற்கு, அப்படி எந்தவிதமான தீம் இசையையும் வெளியிடப்படமாட்டாது என்றும் படத்தில் ஆங்காங்கே இடம் பெறும் தீம் இசை நிச்சயமாக உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்றும் கூறினார்.

அடுத்து  தியேட்டர்களில் காலை 1 மணி காட்சிகள் இருக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதை தியேட்டர் உரிமையாளர்களே முடிவு செய்வார்கள் என்றும் 4000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிகில் படம் வெளியாகும் என்றும் கூறினார். இது மட்டுமல்லாமல் படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறதே என்று கேட்டதற்கு இது கால்பந்தை மையப்படுத்திய படம் என்பதால் அந்த நீளம் தேவைப்பட்டது என்றும் இந்தப் படத்தின் மூலம் கால்பந்தாட்டம் தனி கவனம் பெறும் என்றும் கூறினார். 

இது மட்டுமல்லாமல் ட்ரெய்லரில் இடம் பெற்ற காட்சிகளில் கிராபிக்ஸ்சிறப்பாக இல்லையே என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ட்ரெய்லரை விட தியேட்டரில் கிராபிக்ஸ்காட்சிகள் பிரமாதமானதாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாவதை எப்படி தடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு அதற்காக பிரேத்யக முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், உண்மையில் விஜய் எத்தனை நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று கேட்டதற்கு மொத்தமாக 198 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், அதில் விஜய்க்கு தேவையான 150 நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் கூறினார்.

அஜித்துடன் இணைய வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டதற்கு அதற்கான சரியான கதை, நேரம் வரும் போது நிச்சயம் அது நடக்கும் என்று கூறினார். இதுமட்டுமல்லாமல் படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனை வெளியீடுவீர்களா என்று கேட்டதற்கு அதற்கான யோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இறுதியாக படம் பார்க்கும் ரசிகர்கள், படம் பார்க்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!
ThaiKizhavi: சிவகார்த்திகேயன் குரலில் 'தாய் கிழவி வாரா'! இணையத்தை கலக்கும் அதிரடி பாடல்!