"கப்பு முக்கியம் பிகிலு"... வெளியானது ராயப்பன் எமோஷனல் மொமண்ட்... யு-டியூப்பை தெறிக்கவிடும் பிகில் ஸ்னீக் பீக் வீடியோ...!

Published : Nov 16, 2019, 05:44 PM IST
"கப்பு முக்கியம் பிகிலு"... வெளியானது ராயப்பன் எமோஷனல் மொமண்ட்... யு-டியூப்பை தெறிக்கவிடும் பிகில் ஸ்னீக் பீக் வீடியோ...!

சுருக்கம்

இந்தப் படத்தில் புட்பால் மேட்ச் விளையாட போகும் மகன் விஜயிடம், ராயப்பன் "கப்பு முக்கியம் பிகிலு" என்று சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்த வசனம் டிக்-டாக், மியூசிக்கலி என அனைத்திலும் வைரலாக பரவியது. 

விஜய் - அட்லீ கூட்டணியில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த 'பிகில்' திரைப்படம் 4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாரா, கதிர், யோகி பாபு, ஆனந்தராஜ், விவேக், இந்துஜா, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சுமார் 180 ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படம், இதுவரை உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கலக்கி இருந்தார் விஜய். பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச் மைக்கேல் கேரக்டர் அளவிற்கு, அவரது தந்தையாக வரும் ராயப்பன் கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் புட்பால் மேட்ச் விளையாட போகும் மகன் விஜயிடம், ராயப்பன் "கப்பு முக்கியம் பிகிலு" என்று சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்த வசனம் டிக்-டாக், மியூசிக்கலி என அனைத்திலும் வைரலாக பரவியது. 

யு-டியூப்பில் 'பிகில்' படத்தின் வீடியோ சாங் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஸ்னீக் பீக் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று வெளியிடப்பட்ட ராயப்பன் எமொஷனல் மொமெண்ட் ஸ்னீக் பீக் வீடியோ ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. யு-டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை 6 மணி நேரத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?