உதயநிதி விவகாரம்...திடீரென மொட்டை மாடி கல்பனாவாக மாறிய ஸ்ரீரெட்டி...

Published : Nov 16, 2019, 05:22 PM IST
உதயநிதி விவகாரம்...திடீரென மொட்டை மாடி கல்பனாவாக மாறிய ஸ்ரீரெட்டி...

சுருக்கம்

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தனது ஏழெட்டு முகநூல் கணக்குகள் வாயிலாக தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா தொடங்கி தமிழில் ஏ.ஆர்,முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட நடிகர்களின் அந்தரங்கங்களை இடம், நேரம், காலம் வரை புட்டுப்புட்டு வைத்து வந்ததோடு அவர்களிடம் மிரட்டல் தொனியில் நடிக்கவும் வாய்ப்புக் கேட்டு வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

உதயநிதி ஸ்டாலின் குறித்து விவகாரமாகப் பதிவிட்ட முகநூல் பக்கம் என்னுடையது அல்ல. என் பெயரில் நூற்றுக்கணக்கான போலி அக்கவுண்ட்டுகள்  உள்ளன’என்று நடிகை ஸ்ரீரெட்டி பல்டி அடித்ததைத் தொடர்ந்து ‘ஏம்மா நீ அந்த மொட்டை மாடி கல்பனா கேரக்டரா...அப்ப எதுதான் உன்னோட ஒரிஜினல் அக்கவுண்ட். அதை சொல்லு’என்று அவரது முகநூல் ஜொள்ளர்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தனது ஏழெட்டு முகநூல் கணக்குகள் வாயிலாக தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா தொடங்கி தமிழில் ஏ.ஆர்,முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட நடிகர்களின் அந்தரங்கங்களை இடம், நேரம், காலம் வரை புட்டுப்புட்டு வைத்து வந்ததோடு அவர்களிடம் மிரட்டல் தொனியில் நடிக்கவும் வாய்ப்புக் கேட்டு வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

அதன் தொடர்ச்சியாக தான் ஓராண்டுக்கு முன்பு வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தொடர்பான ஒரு பதிவை வெளியிட்ட அவர் இன்று பிரஸ் மீட்டில் அனைத்தையும் புட்டுப்புட்டு வைக்கப்போவதாக அறிவித்து அப்படியே பல்டியும் அடித்தார். அந்த பல்டியின் போது ‘உதயநிதியை தான் நேரில் கூட பார்த்ததில்லை என்றும் தன் பெயரில் யாரோ போலிக் கணக்கு தொடங்கியிருப்பதாகவும் கூறி ஜகா வாங்கினார். அதையொட்டி முகநூலில் அவரை ஃபாலோ செய்யும் நபர்கள்,...இந்த உதய நிதி கதை மட்டும் தான் அப்படியா.. மத்த கதைகளும் இதே மாதிரி ரீல் தானா? உன்னுடைய ஒரிஜினல் அக்கவுண்ட் எதும்மா? என்று வரிசையாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரித்து வருகிறார்கள்.

இன்று நடந்த பிரஸ் மீட்டில், ‘ஒரு படத்துல கூட உருப்படியா நடிக்காம ஊர் ஊருக்கு எப்படிம்மா பங்களா பங்களாவா வாங்கிக் குவிக்கிற? என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு ‘நல்ல கேள்வி, நல்ல கேள்வி’ என்று அரசியல்வாதிகளைப் போலவே நழுவிய அவர் முகநூல் தொடர்பாளர்களின் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!