பிகில் வசூல் செய்தி எல்லாம் பச்சைப் பொய் …..5 ஆவது நாளே படுத்திருச்சு .. உண்மையை போட்டுடைத்த ராஜன் !!

Published : Nov 08, 2019, 07:56 AM ISTUpdated : Nov 08, 2019, 09:02 AM IST
பிகில் வசூல் செய்தி எல்லாம் பச்சைப் பொய் …..5 ஆவது நாளே படுத்திருச்சு .. உண்மையை போட்டுடைத்த ராஜன் !!

சுருக்கம்

தீபாவளி அன்று வெளியான விஜயின் பிகில் படம் வசூல் சாதனை படைத்துள்ளது என வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானது என்றும், வெளியான 5 ஆவது நாளே படம் படுத்துவிட்டது என்றும் தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த தீபாவளியன்று விஜயின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. பிகில் திரைப்படம் வெளிவருதற்கு முன்பு பிரமோஷன் பெரிய லெவலல் இருந்தது. பிகில் திரைக்கு வரும்போது ஏன் தேவையில்லாமல் கைதி படத்தை ரிலீஸ் செய்து ரிஸ்க் எடுக்கிறார்கள் என பேசப்பட்டது.

ஆனால் படங்கள் திரைக்கு வந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிகில் படம் 100 கோடி வசூல் 200 கோடி வசூல் என தகவல் வெளியானது. பிகில் எதிர்பர்த்த அளவு இல்லாத நிலையில் வலுவான கதை மற்றும் திரைக்கதையால் கைதி படம் ரசிகர்களை ஈர்த்தது.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் ஒரு பேட்டியில், பிகில் படம் பெரும் வெற்றி, வசூல் வேட்டை, 200 கோடி வசூல் என்றெல்லாம் என்று பலர் பரப்பிவருகின்றனர். அப்படியெல்லாம் பெரிய வெற்றி ஒன்றும் இல்லை, ஐந்தாவது நாளே படுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு நாள் நன்றாக வசூல் ஆனது, நாட்கள் செல்ல செல்ல வசூல் குறைந்து, ஐந்தாவது நாள் படுத்துவிட்டது என்று அவர் கூறினார்.

படத்தின் இயக்குனர் அட்லீ தேவையில்லாமல் பல செலவுகளை செய்து படத்தின் பட்ஜெட்டை உயர்த்திவிட்டார் என்றும், அந்த தொகையை மீட்பது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார். 

அதே நாளில் குறைந்த செலவில் எடுத்த கைதி படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்றார். 2019 ஆம் ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை மற்றும் பேட்ட திரைப்படங்கள் தான் நல்ல வசூலைக் கொடுத்துள்ளது என்றும், தற்போது கைதி நல்ல வசூலை தநது கொண்டிருப்பதாகவும் ராஜன் தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!