'பிகில்' இசை வெளியீட்டு விழாவை காண ஆசையாசையாய் வந்த ரசிகர்கள்! தடியடி நடத்தி விரட்டி அடித்த போலீசார்!

Published : Sep 20, 2019, 12:12 PM IST
'பிகில்' இசை வெளியீட்டு விழாவை காண ஆசையாசையாய் வந்த ரசிகர்கள்! தடியடி நடத்தி விரட்டி அடித்த போலீசார்!

சுருக்கம்

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் கை கோர்த்து நடித்து வரும் திரைப்படம், 'பிகில்'. பெண்களின் கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், மிக பிரமாண்டமாக எடுத்து முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுப்பாக நடைபெற்று வருகிறது.

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் கை கோர்த்து நடித்து வரும் திரைப்படம், 'பிகில்'. பெண்களின் கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், மிக பிரமாண்டமாக எடுத்து முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம், 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா சாய் ராம் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நேற்றைய நிகழ்ச்சியில் நாயகன், ஏ.ஆர்.ரகுமான். படத்தின் நாயகன் விஜய், இயக்குனர் அட்லீ,மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியை காண லட்ச கணக்கான ரசிகர்கள் சாய் ராம் கல்லூரிக்கு வந்திருந்தனர். ரசிகர்களை உச்சாக படுத்தும் விதமாக, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் தான் பாடிய வெறித்தனம் பாடலையும் பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், தன்னுடைய பேனர்கள் மீது கை வையுங்கள், தன் மீது கூட கை வையுங்கள்... ஆனால் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் என மிகவும் உணர்ச்சி பூர்வமாக பேசினார். விஜய் அனைவர் மத்தியிலும் இதனை பேசி கொண்டிருக்கும் போதே... கூட்ட நெரிசலை கட்டு படுத்த போலீசார், ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யை ஒரு ஓரமாய் நின்று பார்த்து விட வேண்டும் என பல்வேறு ஊர்களில் இருந்து வந்து, இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த ரசிகர்கள் பலருக்கு மிஞ்சியது அடி மட்டுமே...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!