தீபாவளிக்கு மிரட்ட போவது பிகிலா - பட்டாசா? விஜயுடன் மோதும் தனுஷ்!

Published : Jul 30, 2019, 07:56 PM IST
தீபாவளிக்கு மிரட்ட போவது பிகிலா - பட்டாசா? விஜயுடன் மோதும் தனுஷ்!

சுருக்கம்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.   

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், விஜயின் பிகில் படத்தோடு, இயக்குனர் துறை செந்தில் குமார், இயக்கத்தில் உருவாகி வரும், தனுஷின் 'பட்டாஸ்' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, தனுஷ் ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி இரட்டை தீபாவளியாக அமைந்துள்ளது.

இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தில், மெஹ்ரீன் பிர்ஸாடா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  மேலும் நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக  நடிக்கிறார்.

விவேக் - மெர்வின் இசையில், உருவாகும் இப்படத்தை, டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். மேலும் ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

TTF Vasan : டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு? வீக் எண்டில் விஜய் சேதுபதி வைக்கப்போகும் செக்..!
Karthik Sabesh : தேவாவின் தம்பி மகன்... கோலிவுட்டின் நண்பேன்டா! யார் இந்த கார்த்திக் சபேஷ்? இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?