பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

Published : Jun 03, 2023, 01:28 PM ISTUpdated : Jun 03, 2023, 01:48 PM IST
பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை வீட்டில் ஏற்பட்டுள்ள மரணம், ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில், தெருக்கூத்து கலைஞரான பிக்பாஸ் தாமரையும் பங்கேற்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், பிக்பாஸ்  வீட்டின் உள்ளே வந்த புதிதில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன, எப்படி விளையாட வேண்டும் என்பது கூட தெரியாது என அப்பாவித்தனமாக பேசினாலும், முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டின் தலைவியாக மாறி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இவரை பார்த்த பலரும், ஒரு மாதம் கூட பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்க மாட்டார் என எண்ணிய நிலையில்... அதிரடியாக விளையாடி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் இருந்தார். கழுத்தை நெறிக்கும் கடன், பண தேவை இருந்த போதிலும்... பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறாமல் இவர் நின்று விளையாடியது ரசிகர்களை கவர்ந்தது. 

கர்ப்பத்தை தொடர்ந்து காதலரோடு இணைந்து வெளியிட்ட மோதிர விரல் புகைப்படம்! அப்போ கல்யாணம் ஆகிடுச்சா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் விஜய் டிவியில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய தாமரை, பின்னர் பாரதி கண்ணம்மா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும், பொம்மி சீரியலிலும் நடித்து வருகிறார்.

ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' வசூலை மிஞ்சிய ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்! முதல் நாள் வசூல் விவரம்!

தாமரையின் பெற்றோர் வாழ்வதற்க்கு சரியான வீடு கூட இல்லாமல் அவதி பட்டு வருவது குறித்து அறிந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கிரவுண்ட் ஃபண்டு மூலம் வீடு கட்டி வருகிறார். இன்னும்  ஓரிரு வாரங்களில் வீட்டின் அணைத்து பணிகளும் நிறைவடைந்து, கிரஹப்பிரவேசம் நடைபெற இருந்த நிலையில், பிக்பாஸ் தாமரையின் தந்தை, கடந்த மாதம் 31 ஆம் தேதி உடல்நல குறைவால் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தந்தையின் இழப்பால், கலங்கி நிற்கும் தாமரைக்கு ரசிகர்கள் பலர் தங்களின் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!