BiggBoss: மருத்துவமனையில் இருந்தே பேசும் கமல்... செம்ம ட்விஸ்ட்? இந்த வார தொகுப்பாளர் குறித்த ப்ரோமோ இதோ!

Published : Nov 27, 2021, 05:31 PM IST
BiggBoss: மருத்துவமனையில் இருந்தே பேசும் கமல்... செம்ம ட்விஸ்ட்? இந்த வார தொகுப்பாளர் குறித்த ப்ரோமோ இதோ!

சுருக்கம்

நடிகர் கமலஹாசன் (Kamal hassan) தற்போது மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியாகி பலரது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  

நடிகர் கமலஹாசன் தற்போது மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியாகி பலரது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும், கமல் வரும் நாட்களில் இந்த நிகழ்ச்சியின் மீது உள்ள ஆர்வம் உலகில் உள்ள கோடான கோடி ரசிகர்களுக்கும் அதிகரிப்பது வழக்கம் தான். மற்ற நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மிஸ் பண்ணும் ரசிகர்கள் கூட, ஒரு நாளும் கமல் வரும் இரு தினங்களில் மிஸ் செய்வது கிடையாது.

அதைப்போல் ஒவ்வொரு வார இறுதி நிகழ்ச்சியின் போதும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் செய்யும் தவறினை சாட்டை அடி கேள்விகளால் அவர்களின் தவறுகளை புரிய வைப்பது மட்டும் இன்றி,  மக்கள் தரப்பிலிருந்து ஒவ்வொரு கேள்வியையும் முன்வைப்பதில் கமல் ஹாசனை மிஞ்ச முடியாது. அதே போல் எலிமினேஷன் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் தற்போது கமல் மருத்துவமனையில் இருப்பதால், யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் சற்று முன் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அனைவரும் எதிர்பார்த்தது போல, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகையும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' ஜோடி நிகழ்ச்சியின் நடுவருமான ரம்யா கிருஷ்ணன் தான் தற்போது புதிய தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் ஏற்கனவே, தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நாகார்ஜுனா வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது, அவர் தொகுத்து வழங்க வேண்டிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் மருத்துவமனையில் இருந்த படியே பேசும் நடிகர் கமலஹாசன், இந்த நிகழ்ச்சியை தொய்வில்லாமல் வழங்க தனக்கு ஒரு தோழி உதவி செய்வதாக கூறியிருக்கிறார் என்று கூறியபின் நடிகை ரம்யா கிருஷ்ணனின் என்ட்ரி காட்டப்படுகிறது. மேலும் நடிகர் கமலஹாசன் விரைவில் குணமாகி வர போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் மிஸ் செய்தாலும் அடுத்த வாரம் புது பொலிவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

 தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!