மீண்டும் அவமதிக்கப்பட்டேன்... அதிர்ச்சி பதிவை வெளியிட்ட பிக்பாஸ் சுரேஷ் தாத்தா..! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

Published : Jan 13, 2021, 05:58 PM IST
மீண்டும் அவமதிக்கப்பட்டேன்... அதிர்ச்சி பதிவை வெளியிட்ட பிக்பாஸ் சுரேஷ் தாத்தா..! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

சுருக்கம்

இன்றைய தினம், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ஷிவானி மற்றும் சுரேஷ் தாத்தா செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் அவமதிக்கப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் கூறியுள்ளது இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

இன்றைய தினம், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ஷிவானி மற்றும் சுரேஷ் தாத்தா செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் அவமதிக்கப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் கூறியுள்ளது இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள், உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உச்சகப்படுத்தும் விதத்தில், மீண்டும் வீட்டுக்குள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தியிடம் நீங்கள் எப்போது செல்வீர்கள் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்தனர்.

இதற்க்கு அவர் தனக்கு அழைப்பு வரவில்லை என கூறியதோடு, ஒருவேளை  நான் உள்ளே செல்ல தகுதி இல்லாதா போட்டியாளராக இருக்கலாம் என மனவேதனையோடு பதிவு ஒன்றை போட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறுவார் என முதல்முதலில் ரசிகர்கள் நினைத்தது சுரேஷ் தாத்தாவை தான். 

ஆரம்பத்தில் இருந்தே இவர் கொளுத்தி போட்ட விஷயங்கள், மற்றும் குசும்பு தனம் செய்தது பலரையும் கவர்ந்தது. ஆனால் ஒரு நிலையில் உள்ளே போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் இவரை அமைதியான மனிதராக மாற்றியதால், யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேண்டும் என அவருக்கு ஆதரவாக பலர் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்த நிலையில்,  சேனல் நிர்வாகம் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறி தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்தார். 

எனவே இன்று ஷிவானி மற்றும் சுரேஷ் தாத்தா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவமதிக்கப்பட்டதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இது இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சுரேஷ் செல்லாதது ஏன்? என அவரது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!