Biggboss 5: மகனை பார்த்து கண்ணீர் விட்ட தாமரை! மல்லி பூவோடு விசிட் அடித்த கணவர் களைகட்டும் ஃப்ரீஸ் டாஸ்க் !

Published : Dec 24, 2021, 02:24 PM IST
Biggboss 5: மகனை பார்த்து கண்ணீர் விட்ட தாமரை! மல்லி பூவோடு விசிட் அடித்த கணவர் களைகட்டும் ஃப்ரீஸ் டாஸ்க் !

சுருக்கம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 (Biggboss Seasson 5) நிகழ்ச்சி 80 நாட்களை எட்டியுள்ள நிலையில், தற்போது விறுவிறுப்பான ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் தாமரையின் கணவர் (Thamarai) மற்றும் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் நடித்துள்ள புரோமோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 80 நாட்களை எட்டியுள்ள நிலையில், தற்போது விறுவிறுப்பான ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் தாமரையின் கணவர் மற்றும் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் நடித்துள்ள புரோமோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி சுமார் 3 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், இதுவரை தங்களுடைய குடும்பத்தினரை பார்க்காமல் இருந்த போட்டியாளராகளை, கடந்த வாரம் முதல் அவர்களுடைய குடும்பத்தினர் சந்தித்து வருகிறார்கள். போட்டியாளர்களும் இத்தனை நாள் அவர்களை பார்க்காமல் ஏங்கியதை தங்களுடைய கண்ணீர் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதுவரை அக்ஷரா குடும்பத்தினர், சிபி குடும்பத்தினர், ராஜு மோகன் குடும்பத்தினர், பிரியங்கா குடும்பத்தினர், நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் வந்த நிலையில், தற்போது தாமரையின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். முதலில் தாமரையின் மகன் வருவதையும், பின்னர் தாமரையின் கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதையும் ப்ரோமோ மூலம் காட்டியுள்ளனர் நிகழ்ச்சியாளர்கள். கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகன் தன்னிடம் இல்லை, அவனுக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறிய தாமரையின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவே இன்றைய தினம் தாமரையின் மகன் உள்ளே வந்துள்ளார்.

அவரை பார்த்ததும், தாமரை கண்ணீர் விட்டு அழுதார், பின்னர் தாமரையின் குடும்பத்தினர் மற்றும் கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் புரோமோவும் வெளியாகியுள்ளது. கணவரை பார்த்ததும் கட்டி அணைத்து மாமா என வாய் நிறைய கூப்பிட்டு அவரை வரவேற்றுள்ளார். அவரும் தன்னுடைய மனைவிக்கு ஆசையாக வாங்கி வந்த பூவை  தலையில் வைத்து விட்டு அழகு பார்க்கிறார். எனவே இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை மகனின் குறும்பு தனத்தாலும், அவரது கணவரின் வருகையாலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!