அடிவாங்கி உடம்பு மறுத்துடுச்சு... நமீதாவின் கதையை கேட்டு கண்ணீரில் மூழ்கிய போட்டியாளர்கள்..!!

Published : Oct 07, 2021, 11:41 AM IST
அடிவாங்கி உடம்பு மறுத்துடுச்சு... நமீதாவின் கதையை கேட்டு கண்ணீரில் மூழ்கிய போட்டியாளர்கள்..!!

சுருக்கம்

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  (Biggboss seasson 5) இந்த வாரம் முழுவதும், போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை ஒரு கதையாக கூறவேண்டும் என்பதை பிக்பாஸ் ஒரு டாஸ்காக கொடுத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள புரோமோவில், நமீதாவின் (namitha marimuthu) கதையை கேட்டு அனைத்து போட்டியாளருமே கண்ணீர் விடும் காட்சி வெளியிடப்பட்டுளள்து.  

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும், போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை ஒரு கதையாக கூறவேண்டும் என்பதை பிக்பாஸ் ஒரு டாஸ்காக கொடுத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள புரோமோவில், நமீதாவின் கதையை கேட்டு அனைத்து போட்டியாளருமே கண்ணீர் விடும் காட்சி வெளியிடப்பட்டுளள்து.

ட்ரான்ஸ் மாடலும், நடிகையுமான நமீதா, பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போதே, தன்னை போன்ற திருநங்கைகளை சாதாரண மனிதராக பலர் பார்ப்பதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னால் முடிந்தவரை தன்னுடைய சமூகம் பற்றி எடுத்து கூறவும் தான் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இவர் ஒரு திருநங்கையாக இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் இவரை யாரும் வேறுபடுத்தி பார்க்கவில்லை என்பது கடந்த மூன்று நாள் இவரிடம் போட்டியாளர்கள் நடந்து கொண்டதில் இருந்தே தெரிந்தது. எனவே நமீதாவும், மிகவும் சுதந்திரமாக தன்னுடைய விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் லக்சுரி டாஸ்குக்காக இன்றைய தினம் நமீதா தன்னை பற்றி மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் பேசுகிறார்.

அப்போது, தன்னுடைய அம்மா சிறிய வயதில் இருந்தே யாருக்காவது ஏதேனும் குறை இருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொல்லி சொல்லி தான் வளர்த்ததாகவும், ஆனால்... எனக்கு இப்படி ஒரு குறை இருக்கிறது என்பது தெரிந்த பின்னர் என்னை அவங்க ஏற்றுக்கொள்ளவில்லை. அடி அடின்னு அடித்ததில் உடம்பே மறுத்து போச்சு. இப்போதும் திருநங்கைகள் என்றால் பிச்சை ஈடுபவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் தான் பலர் பார்க்கிறார்கள். இதற்கு முழு காரணம் பெற்றோர் தான். அவர்களை பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை. எங்களை மாறுங்கள் மாறுங்கள் என சொல்பவர்கள் முதலில் நீங்கள் மாறுங்கள் என கண்ணீரோடு கூறியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !