BiggBoss Vanitha : திடீரென மதம் மாறியது ஏன்? - ரகசியத்தை உடைந்த வனிதா

Ganesh A   | Asianet News
Published : Mar 29, 2022, 10:58 AM ISTUpdated : Mar 29, 2022, 10:59 AM IST
BiggBoss Vanitha : திடீரென மதம் மாறியது ஏன்? - ரகசியத்தை உடைந்த வனிதா

சுருக்கம்

BiggBoss Vanitha : இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார், தற்போது தான் மதம் மாறியது ஏன் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.

வனிதாவும்... சர்ச்சைகளும்

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவர் பீட்டர் பால் என்பவரை காதலித்து 3-வது திருமணம் செய்துகொண்டார். இந்த உறவு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதிகம் குடித்துவிட்டு கலாட்டா செய்த பீட்டர்பாலை அடித்து துரத்திவிட்ட வனிதா, அவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். 

இதையடுத்து படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தினார் வனிதா. குறிப்பாக இவர் பிபி ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடினார்.

குவியும் பட வாய்ப்பு

தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வனிதா, இவர் கைவசம் அனல் காற்று, காத்து, தில் இருந்தா போராடு, கென்னி, பிக் அப் டிராப், அந்தகன், சிவப்பு மனிதர்கள், 2கே காதல் அழகானது என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இதுதவிர அண்மையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் வனிதா. மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் வனிதா.

மதம் மாற்றம் ஏன்?

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வனிதா, தற்போது தான் மதம் மாறியது ஏன் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி சந்தோஷமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்வை வாழ தான் சில வருடங்களுக்கு முன் புத்த மதத்தை பின்பற்ற தொடங்கியதாகவும், அதன்பின் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்... sivakarthikeyan : மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ரூ.4 கோடி சம்பள பாக்கி- தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!