சிறுமிகளுடன் ஆபாச பேச்சா? எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் டேனியல்!

Published : Apr 21, 2021, 04:43 PM IST
சிறுமிகளுடன் ஆபாச பேச்சா? எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் டேனியல்!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று சுமார் 70 நாட்களுக்கு மேல் போராடி, கடைசி சில தினங்களுக்கு முன் வெளியேறியவர் டேனியல். இந்நிலையில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்க்கு தன்னுடைய வக்கீல் மூலம் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.  

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று சுமார் 70 நாட்களுக்கு மேல் போராடி, கடைசி சில தினங்களுக்கு முன் வெளியேறியவர் டேனியல். இந்நிலையில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்க்கு தன்னுடைய வக்கீல் மூலம் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

பல படங்களில் காமெடி வேடத்தில், டேனியல் பாலாஜி நடித்திருந்தாலும், இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபல படுத்தியது என்றால் அது, பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய கையேடு, சில படங்களில் நடித்தாலும், அதற்க்கு முன்னதாக தன்னுடைய காதலி டெனிசா என்பவரைத் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் டேனியல் சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக பேசியதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், இதற்க்கு மறுப்பு தெரிவித்து,வக்கீல் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த தகவலை டானியல் தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து டேனியல் வக்கீல் வெளியிட்டுள்ள நோடீஸில்... ’பிக்பாஸ் டேனியல் மீது முகாந்திரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவோர் மற்றும் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தன் மீதி பொய்யாக பரவி வரும் தகவலுக்கும், முற்று புள்ளி வைத்துள்ளார் டேனியல் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!