பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததுமே அனிதா சம்பத் வீட்டில் நடந்த சோகம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Published : Dec 29, 2020, 11:18 AM ISTUpdated : Dec 29, 2020, 11:33 AM IST
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததுமே அனிதா சம்பத் வீட்டில் நடந்த சோகம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

சுருக்கம்

செய்தியாளராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு விளையாடிய அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

செய்தியாளராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு விளையாடிய அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். 2 .0 போன்ற சில படங்களில் செய்தியாளராகவே தோன்றி பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை எட்டிய அனிதா சம்பத், சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

மிகவும் விறுவிறுப்பான போட்டியாளரான இவர், ஆரி பற்றி விமர்சித்ததால் ரசிகர்கள் கோவத்திற்கு ஆளாகி.... கடந்த வாரம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு கூட தொகுப்பாளர் கமலஹாசனிடம் இந்த வருட ஆங்கில புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், சந்தோஷமாக வெளியே வந்த, அனிதா சம்பத் குடும்பத்தில் இடி போல் நிகழ்ந்துள்ளது ஒரு துக்க சம்பவம். அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. . இவர்  சிறந்த கதை ஆசிரியர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். நடிகர் கமலஹாசன் உட்பட பலர் அனிதா சம்பத் மரணத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!