வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகிய பாரதிராஜா..! அவருக்கு பதில் நடிக்க போவது இவரா?

Published : Dec 28, 2020, 06:20 PM IST
வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகிய பாரதிராஜா..! அவருக்கு பதில் நடிக்க போவது இவரா?

சுருக்கம்

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த, இயக்குனர் பாரதி ராஜா இப்படத்தில் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த, சூரி  ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் என்பது நாம் அறிந்தது தான். இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான போதிலும், கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால், படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த, இயக்குனர் பாரதி ராஜா இப்படத்தில் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே குளிர் காலமாக இருப்பதால் இயக்குனர் பாரதி ராஜாவின் உடல் நிலை படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராமல், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்தப் படத்தில் இருந்து பாரதி ராஜா விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.

அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து ,பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி படத்தை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யாவுடன் வாடி வாசல், தனுஷ் உடன் புதிய கூட்டணி என வெற்றிமாறன் படு பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர்யூட்டும் நந்தகுமார்; மண்ணைக் காக்க வந்த மாமனிதனின் சாதனைகள்!
டான்ஸில் தெறிக்க விட்ட தளபதி விஜய் – பாடலில் பட்டைய கிளப்பும் ஸ்டெப்ஸ்; இனி ஒரு பய கமெண்ட் பண்ண முடியாது!