BiggBoss5Promo கைகூப்பி கும்பிடும் ராஜு; டீமை விட்டு விலக முடிவெடுக்கும் பாவனி; பிக் பாஸ் ப்ரோமோ உள்ளே!!

Kanmani P   | Asianet News
Published : Dec 01, 2021, 01:30 PM ISTUpdated : Dec 01, 2021, 01:32 PM IST
BiggBoss5Promo கைகூப்பி கும்பிடும் ராஜு; டீமை விட்டு விலக முடிவெடுக்கும் பாவனி; பிக் பாஸ் ப்ரோமோ உள்ளே!!

சுருக்கம்

Bigg Boss5 promo பாவனியின் கோபத்திற்கு ஒரே குழுவில் இருக்கும் அண்ணாச்சி, ராஜு இருவரும் பாவனியை கலந்து கொள்ளாமல் முடிவெடுப்பதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் அண்ணாச்சி - நிருப் இடையேயான சண்டை பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தாமரை வீட்டிலிருந்தாலும் பிரச்னை, நாட்டிலிருந்தாலும் பிரச்சனை என பிரியங்கா கூறியதாக சொல்லி தாமரை அவரை நாமினேட் செய்தது வெளியில சிறுது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய கடந்த  வார இறுதி எபிசோட்டில் உண்மை புதைக்கப்பட்டதாகவும், முழு உண்மையை பிக் பாஸ் சோ ஒளிபரப்புவதில்லை எனவும் புகார் எழுந்தது. 

நேற்று "பிரேக்கிங் நியூஸ்" என்னும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.  அதன்படி ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிக்கப்படுவதாக பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது.

அப்போது மீண்டும் பிரியங்கா- தாமரை இடையே பிரச்சனை பற்றிக்கொள்கிறது. டாஸ்கின் போது பேசும் பிரியங்கா: “எனக்கு இப்போ தான் புரிஞ்சது யார் யாரை இந்த வீட்ல நம்பணும், யார் யாரை நம்பக் கூடாதுன்னு” என்று கூறுகிறார். 

பின்னர் பிரியங்காவையும், தாமரையையும் உட்கார வைத்து, ’இவங்க என்ன மாதிரியான ஃப்ரெண்ட் உங்களுக்கு’ என்று கேள்வி எழுப்ப, ‘எனக்கு ஃப்ரெண்டே கிடையாது. நம்ம பேச்சு மட்டும் தான் உயர்ந்திருக்கணும், மத்தவங்க எல்லாம் நமக்கு கீழ தான்னு நினைக்கிறது பிரியங்கா தான். என போட்டுடைக்கிறார் தாமரை இதனால் பிக் பாஸ் வீட்டில் வரும் நாட்கள் மிகுந்த சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர் நோக்கி உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய எபிஷோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’போராடி தோக்குறது வேற, ஒண்ணுமே பண்ணாம தோக்குற்து வேற’ என அமீர் கூற, ’ஒவ்வொருவாட்டியும் கேள்வி கேக்கும் போது, எனக்கு சரியான பதில் வரல’ என்கிறார் பாவனி. இதையடுத்து, பாவனிக்கும், ராஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர் பாவனியிடம் ராஜு சாரி கேட்க, ‘எப்போ பாத்தாலும், சண்ட சண்ட சண்ட... என்ன வேற வேலையில்லையா எனக்கு’ என்கிறார் பாவனி. பாவனியின் கோபத்திற்கு ஒரே குழுவில் இருக்கும் அண்ணாச்சி, ராஜு இருவரும் பாவனியை கலந்து கொள்ளாமல் முடிவெடுப்பதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!