
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்கொலை செய்து கொண்டதாக அவர் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரபல பெங்காலி நாளிதழ்.
நடிகை யாஷிகா ஆனந்த், திரைப்பட நடிகையாக இருந்தாலும், இவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாக்கியது 'பிக்பாஸ்' நிகழ்ச்சிதான்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் காலத்து கொண்டு விளையாடியவர்களில் மிகவும் குறைவான வயதுடைய போட்டியாளர் என்கிற பெருமையையும் பெற்றார். அதே போல் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்த நடிகர் மஹத்தை காதலித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிரபல டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும், தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்துகொண்டதாக, பெங்காலி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட அதை தன்னுடைய நண்பர்கள் மூலம் அறிந்து மிகவும் கோவமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் யாஷிகா.
இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம், கடந்த வாரம் தமிழ் சினிமாவில் சில படங்களிலும் , குணச்சித்திர வேடத்திலும், சின்னத்திரை நடிகையான யாஷிகா என்கிற பெண் ஒருவர், காதலன் தாலி காட்டாமல் தன்னுடன் வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாக கூறி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலை பெங்காலி நாளிதழ் ஒன்று யாஷிகா ஆனந்தின் புகைப்படத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு தான் யாஷிகா இவ்வளவு கோபமாகியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.