இங்க வந்தும் நிறுத்தலையா?... கடுமையாக வாதாடும் தாமரை- நிரூப்..ரூல்ஸ பாலோ பண்ணுங்கப்பா..

Kanmani P   | Asianet News
Published : Feb 09, 2022, 06:31 PM IST
இங்க வந்தும் நிறுத்தலையா?... கடுமையாக வாதாடும் தாமரை- நிரூப்..ரூல்ஸ பாலோ பண்ணுங்கப்பா..

சுருக்கம்

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இன்று போலீஸ் டாஸ்க் விளையாடி வரும் தாமரை, நிரூப் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்படுகிறது.. ஒருவரை ஒருவர் ஏகபோகமாக திட்டிக்கொள்கின்றனர்..

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சென்ற வார எவிக்‌ஷனுக்காக நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். 

இதில் நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, அபிநய் ஆகியோர் முதலில் காப்பாற்றப்படுகின்றனர். இறுதியில் வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். 

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் போலீஸ் டாஸ்க் விளையாடி வரும் தாமரை, நிரூப் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்படுகிறது.. ஒருவரை ஒருவர் ஏகபோகமாக திட்டிக்கொள்கின்றனர்..பிக்பாஸ் சீசன் 5-ல் இருந்த போதும் நிரூப் பெண் போட்டியாளர்களிடம் மோதுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.. தற்போது அதே போக்கை பிக்பாஸ் அல்டிமேட்டிலும் அவர் கடக்கிப்பிடிப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது..

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!