Naaisekar Returns : வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸில் புதுவரவு... கோடி ரூபாய் சம்பளத்தோடு கமிட் ஆன பிரபுதேவா

Ganesh A   | Asianet News
Published : Feb 09, 2022, 12:28 PM IST
Naaisekar Returns : வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸில் புதுவரவு... கோடி ரூபாய் சம்பளத்தோடு கமிட் ஆன பிரபுதேவா

சுருக்கம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வடிவேலு நடிக்கும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் தயாராகி வருகிறது. சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சிவானியும், பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.

மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட பிரபலம் ரெடிங் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிக கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வடிவேலு நடிக்கும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம். பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ள பிரபுதேவாவும், வடிவேலுவும் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்துள்ளதால் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!