"இனி கண்ணீர் வேண்டாம்" தன்ஷிகாவுக்கு அட்வைஸ் பண்ணிய பிக் பாஸ் ஓவியா!

 
Published : Oct 03, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
"இனி கண்ணீர் வேண்டாம்" தன்ஷிகாவுக்கு அட்வைஸ் பண்ணிய பிக் பாஸ் ஓவியா!

சுருக்கம்

Bigg Boss Oviya advised Sai Dhanshika

இனியும் கண்ணீர் வேண்டாம் தன்ஷிகா.. உங்களிடம் இருக்கிறது வெற்றிப் புன்னகை.. சிரித்தபடி இருங்கள் என்று தன்ஷிகாவுக்கு பிக் பாஸ் நாயகி ஓவியா அறிவுரை வழங்கியுள்ளார்."விழித்திரு" பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர், சாய் தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இடையே தன்ஷிகா "மன்னிக்க வேண்டும். வேண்டுமென்றே குறிப்பிடாமல் இல்லை. மறந்துவிட்டேன். உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது" என்று கூறினார். காலிலும் விழவந்தார் தன்ஷிகா. ஆனாலும், டி.ராஜேந்தர் இறுதிவரை விடாமல்  கடுமையாக சாடவே, தன்ஷிகா மேடையிலே அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக தன்ஷிகாவுக்கு ஓவியா அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பு தன்ஷிகா.. எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்துக்கு, உங்கள் மீதான மிக முரட்டுத்தனமான எதிர்வினை அது... மேடை நாகரிகம் என்பதை விட, ஒரு பெண்ணிடம் அன்போடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்வது முக்கியம் என்பதை இன்னும் சிலர் புரிந்து கொள்ளவில்லை என்பது பரிதாபம்.

ஒரு பெண் அவமானப்படுத்தும்போது அவருடன் மேடையில் இருக்கும் இரு ஆண்கள் சிரித்துக் கொண்டிருப்பது அதைவிட எரிச்சலான விஷயம். இனியும் நீங்கள் கண்ணீர் வேண்டாம் தன்ஷிகா.. உங்களிடம் வெற்றிப் புன்னகை இருக்கிறது. சிரித்தபடி இருங்கள் என்று ஓவியா அறிவுரை வழங்கி உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!