
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக ரியோ ராஜ், இரண்டாம் போட்டியாளராக மாடல் சனம் ஷெட்டி, 3ஆம் போட்டியாளராக கமலுடன் “புன்னகை மன்னன்” படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா, 4வது போட்டியாளராக மாடல் பாலா, 5வது போட்டியாளராக சன் டி.வி. செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் போயுள்ளனர்.
6வது போட்டியாளராக சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்போவதாக அறிவித்ததிலிருந்தே ஷிவானியின் பெயர் இல்லாத பட்டியலே கிடையாது. எல்லாருக்கும் இல்லாத புகழாக ஷிவானிக்கு மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதி செய்யப்படும் முன்பே ஆர்மிக்கள் ஆரம்பிக்கப்பட்டது. தினந்தோறும் சோசியல் மீடியாவில் குட்டை உடையில் விதவிதமாக போட்டோ வெளியிட்டு வந்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சியிலும் குட்டை உடையில் அசத்தலாக நடனமாடி ரசிகர்களின் கைத்தட்டலை வென்றார்.
19 வயதான ஷிவானியின் துணிச்சலான முடிவை அவருடைய அம்மா பாராட்டி வழி அனுப்பினார். சினிமா மீது கொண்ட அளவு கடந்த காதலால் அடுத்தக்கட்டத்திற்கு நகருவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.