
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் பல எதிர்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்து அழ வைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இரண்டு ப்ரோமோக்களிலும், திடீர் என, சரவணன் வெளியேறியதை நினைத்து நினைத்து, போட்டியாளர்கள் அழுதனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து சேரன் படிக்கிறார். அதில், உங்களுடைய ஏற்ற தாழ்வில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்கள் பற்றியும், மறக்க முடியாத நிகழ்வை பற்றியும் பகிர்ந்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபிராமி பேசும் போது, என்னுடைய வாழ்க்கையில்... மிகவும் நெருக்கமான நண்பர் தன்னுடைய அம்மா தான். அப்பா - அம்மா பிரிந்த பின், தன்னை வளர்ப்பதற்காக நிறைய விட்டு கொடுத்துள்ளார் என கூறுகிறார். மேலும் தன்னுடைய நம்மைவிட்டு விலகி 4 மாதம் இருந்ததாக கூறி, அதற்கு மன்னிப்பு கேட்டு அழுகிறார். ஏற்கனவே இரண்டு, ப்ரோமோ அழுகையாகவே இருந்த நிலையில் இந்த ப்ரோமோவும் அழுவையாகவே போகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.