
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம், சாக்ஷி தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என மீரா மிதுன் செய்த குழப்பத்தால், இவர் மீது ரசிகர்களுக்கு கோபம் ஏற்பட்டது. இதனால் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மீரா.
பிக்பாஸ் வீட்டில், அடிக்கடி பிரச்சனை செய்து வந்த வனிதா - மீரா இருவருமே ம் வெளியேற்றப்பட்டதால் நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யம் குறையும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று லக்ஸூரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடக்கிறது. இதில் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கெட்அப் கொடுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நடிகர்களுக்கான பாடல் வரும் போது, ஹவுஸ் மேட்ஸ் டான்ஸ் ஆட வேண்டும். அந்த வகையில், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் கெட்டப் போட்டுள்ள சரவணனுக்கான பாடல் அவர் பாத்ரூம் செல்லும் போது போட அவர் பாதியிலேயே ஓடி வந்து டான்ஸ் ஆடுவது ஒளிபரப்பாகி உள்ளது.
அந்த ப்ரோமோ இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.