கனவு நினைவாகிய தருணம்... பிக்பாஸ் தர்ஷனின் 'தாய்க்கு பின் தாரம்' டீசர் ரிலீஸ் அறிவிப்பு!

Published : Aug 26, 2020, 05:46 PM IST
கனவு நினைவாகிய தருணம்... பிக்பாஸ் தர்ஷனின் 'தாய்க்கு பின் தாரம்' டீசர் ரிலீஸ் அறிவிப்பு!

சுருக்கம்

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலம், பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன்

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலம், பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். பிக்பாஸ் டைட்டில் வெல்வதற்கான அணைந்து தகுதிகளும் இருந்தும், ஒரு சில விஷயங்களில் மெச்சூரிட்டி இல்லாமல் நடந்து கொண்டதால், இந்த நிகழ்ச்சியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இவரால் பிக்பாஸ் டைட்டில் வெல்லமுடியாவிட்டாலும், பிக்பாஸ் வெற்றி விழா மேடையிலேயே, கமலஹாசன் அடுத்ததாக அவருடைய ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷன் ஹீரோவாக நடிப்பார் என கூறி, அதற்கான ஒப்பந்த பாத்திரத்தையும் அவர் கையில் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் தற்போது, கமல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2  படத்திலும் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து ஒரு வருடம் ஆகும் நிலையில் இது வரை தர்ஷன் நடிப்பில் ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது முதல் முறையாக  தற்போது தர்ஷன் ஒரு மியூசிக் ஆல்பத்தின் நடித்துள்ளார். 

’தாய்க்கு பின் தாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் தர்ஷன் உடன் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார். இந்த மியூசிக் ஆல்பத்தின் டீசர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதாவது. நாளை வெளியாக இருப்பதாகவும் இந்த ஆல்பம் சித்ஸ்ரீராம் தரண் குமார் இசையில் உருவாகியுள்ளவும் இந்த ஆல்பத்தில் நடித்ததால் தனது கனவு நனவாகியுள்ளதாகவும், தனது சமூக வலைத்தளத்தில் தர்ஷன் தெரிவித்துள்ளார். 

தர்ஷனின் முதல் ரிலீசான, இந்த ஆல்பம் பாடலுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?