
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்த அளவிற்கு ஒரு வெற்றி நிகழ்ச்சிதான் பிக்பாஸ். ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ நடைபெறுவது இல்லை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 1௦௦ நாட்கள் ஒரு வீட்டிற்குள்ளேயே வசிக்க வேண்டும்.அதில் பல டாஸ்க் கடந்த பின்புதான் போட்டியாளர்கள் வெற்றி பெற முடியும்.
அந்த வகையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூத்த ஓவியா காதல் போலவே, ஹிந்தியில் நடைபெற்ற பிக்பாசிலும் போட்டியாளர்களிடேயே காதல் மலர்ந்தது.
நடிகர்கள் அஷ்மித் பட்டேல், மஹெக் சாஹல் இவர்கள் இருவரும் பிக்பாசில் போட்டியாளர்களாக கலந்துக்கொண்ட போது, இருவருக்கும் காதல் மோதல் என அனைத்தும் இருந்தது. பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்தவுடன் மீண்டும் இருவருக்கும் அமைதியான காதல் மலர்துள்ளது. இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் 12 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, தற்போது நிச்சியதார்த்தம் முடிந்துள்ளது . அடுத்த 6 மாதத்திற்குள் இந்த ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.