
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மட்டும் மூன்று புது போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் தான் பல நாட்களாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான காஜல். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காயத்ரியை ஒரு கை பார்ப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், காயத்ரி எலிமினேட் ஆகி இவரிடம் இருந்து தப்பித்து விட்டார்.
இந்நிலையில் ரைசாவிடம் பேசிக்கொண்டிருந்த காஜல் திடீர் என, ஹரீஷ் கல்யாணுக்கு உன்னை மிகவும் பிடித்துள்ளது என எனக்கு என்னுள் இருக்கும் பட்சி சொல்லுவதாக கூறுகிறார். மேலும் ஓவியா ஆரவ் போல் நீங்களும் ஏன் காதலிக்க கூடாது இரண்டு பேரும் வெள்ளையாக அழகாக இருக்கிறீர்கள் என்பது போன்று ரைசாவிடம் கூறுகிறார்.
அதற்கு ரைசா இதல்லாம் வேண்டாம், நான் இப்படியே இருந்து கொள்ளுகிறேன் என்று காஜலிடம் சொல்லுகிறார். ஒரு வேலை ரைசா ஹரீஷ் இடையே காதல் மலருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.