
கடந்த இரண்டு தினங்களாக, பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக சென்றது. செண்டிமெண்ட், காதல், பாடல், ஆட்டம் என, கொஞ்சம் குஷியாக இருந்தனர் போட்டியாளர்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு நேற்றைய தினம், 16 ஆவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்தவர், பிரபல மாடலும், நடிகையுமான மீரா மிதுன்.
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே... பிரச்னையை ஆரம்பித்து, ரணகளம் செய்துள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. "இதில் மீரா மற்றும் அபிராமி ஆகிய இருவருமே, மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு முன் உள்ள கருத்து வேறுபாட்டை மனதில் வைத்து இந்த சண்டை உருவாகிறது என தெரிகிறது.
மீரா மிதுன், அபிராமியை பார்த்து நான் பேச வேண்டானா, என்னிடம் உன் சேட்டையை காட்டாதே என கூறுகிறார். இதற்கு அபிராமி என்கிட்ட பேசாதே என கூறிவிட்டு அங்கிருந்து சென்கிறார். இதற்கு அவர் பைத்தியம் என்பது போல், சைகை செய்கிறார் மீரா.
பின் மீரா பிக்பாஸ் வீட்டின் கேப்டன், வனிதாவுடன் வருகிறார். வனிதா எடுத்ததுமே மீரா உன்னை கத்தினா மட்டும், உனக்கு கண்டிப்பா வரும் என கோபமாக, அபிராமிக்காக வரிந்து கட்டி சண்டை போடுகிறார். பின் உன் பர்சனல் வெஞ்சன்ஸ் வைத்து கொண்டு இப்போ சண்டை போடுகிறது ரொம்ப தவறு என கூறுகிறார்.
மீரா, வனிதாவை பார்த்து அமைதியா இருங்க என கூறி, இப்படி பேசினால் உங்களுக்கு தான் பிபி வரும் என கூற, இதற்கு மிகவும் கோபமாக வனிதா, அதெல்லாம் எனக்கு வராது, இத்தனை வருஷத்துல வராததது, இப்போ வராது என கூறி, இருவரும் காரம் சாரமாக மோதி கொண்டதால், பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.