
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும், நடத்தப்படும் டாஸ்க்குகளில் சிறப்பாக பர்பாம் செய்யும், மூவரை தேர்வு செய்து, அவர்களுக்கு கேப்டன் பதவிக்கான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த முறை, பெயிண்ட் அடிக்கும் டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் சாண்டியை தலைவராக தேர்வு செய்தார் கஸ்தூரி.
இதை தொடர்ந்து இன்று, அடுத்த வாரம், பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவியில் இருக்க போவது, யார் என்று தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்படுவது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
அதாவது கேப்டன் என ஆங்கில வார்த்தைகளை கண்களை காட்டியவாறு, இந்த வார தலைவர் போட்டியில் கலந்து கொண்ட, செரின், மதுமிதா, மற்றும் தர்ஷன் ஆகியோர் அடுக்க வேண்டும். மூவரில் யார் முதலில் குறிப்பிட்ட வார்த்தைகளை ஒரு போர்டில் வைக்கிறார்களோ அவர்கள் தான் இந்த வார தலைவர்.
பிக்பாஸ் பக்கத்தில் இருந்து, விசில் சத்தம் வந்ததும்... தலைவர் போட்டியில் கலந்து கொள்ளும் மூவரும் அடித்து பிடித்து கேப்டன் என்கிற வார்த்தையை அடுக்குகிறார். இவர்களில் மதுமிதா மிகவும் விரைவாக அடிக்கி முடிக்கிறார். எனவே அவரே அடுத்த வார தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துக்களையும் போட்டியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதன் ப்ரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.