
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை எட்டி உள்ளது.
பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேறிய பார்த்திமா பாபு, இந்த வாரத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க, சாண்டி, தர்ஷன், மற்றும் அபிராமி ஆகிய மூவரை தேர்வு செய்தார்.
இவர்கள் மூவருக்கும் பிக்பாஸ் ஒரு கயிறை பேண்ட் ஹூக்கில் மாட்டி விட்டு இதை யார் கழட்டுகிறாரோ, அவர் போட்டியில் இருந்து விளங்குவார் என அறிவித்தது. ஆனால் தலைவர் போட்டியில் பங்கேற்ற மூவருமே கடைசி வரை கழட்டாததால், ஒருவர் தானாகவே விலக வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தது. இதை தொடர்ந்து, இந்த போட்டியில் இருந்து விலகினார் சாண்டி.
அவரை தொடர்ந்து, அபிராமி மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் இந்த போட்டியை தொடர்ந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் மீண்டும் விலக வேண்டும் என பிக்பாஸ் கூறியது. அபிராமி தலைவர் போட்டியில் இருந்து விலக முடியாது என விடா பிடியாக இருந்ததால், திடீர் என தர்ஷன் அபிராமிக்கு சிலர் எதிராக உள்ளதால் இந்த போட்டியில் இருந்து தான் விலகுவதாக கூறி, தலைவர் போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது தலைவராக அபிராமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஏற்கனவே அபியை நாமினேட் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த, வனிதா, சேரன், போன்ற பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என கூறலாம்,
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.