மேக்கப் இல்லாத போட்டோவை பதிவிட்ட ரைசா... செல்லமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 12, 2020, 8:01 PM IST
Highlights


தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் தனது பழைய போட்டோக்களை எல்லாம் ரைசா பதிவிட்டு வருகிறார். 

முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர் ரைசா வில்சன். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார்.லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்தில் அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு படத்திலும் ஜோடி சேர்ந்ததால், ஹரிஷ் கல்யாண், ரைசா இடையே காதல் தீ பற்றி இருப்பதாக வதந்தி கொளுந்துவிட்டு எரிகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. 

தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கலக்கலான ஹாட் போட்டோஸை தட்டிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.தற்போது நிலவும் இந்த லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமான பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, மலரும் நினைவுகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். சிலரோ தங்களது ஹாட் போட்டோஸை பகிர்ந்து ரசிகர்களை கிளு கிளுப்பாகி வருகின்றனர். 

View this post on Instagram

Throwback 🐶

A post shared by Raiza Wilson (@raizawilson) on May 12, 2020 at 1:47am PDT

இதையும் படிங்க: கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் தனது பழைய போட்டோக்களை எல்லாம் ரைசா பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் மேக்கப் இல்லாத தனது பழைய போட்டோ ஒன்றை ரைசா பதிவேற்றியிருக்கிறார். தலைவிரி கோலத்தில் ஹேண்ட் பேக்கில் நாயை வைத்து கொண்டு ரைசா கொடுத்துள்ள போஸை பார்க்கும் நெட்டிசன்கள் உங்களை விட நாய் குட்டி ரொம்ப க்யூட்டா இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

click me!