
முதல் ப்ரோமோவில், இவருடைய என்ட்ரி காட்சி காட்டப்பட்டது. இரண்டாவது ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய, மீராவின் பெயரை இழுத்து, சேரனை கேலி செய்தார். மேலும் அனைத்து போட்டியாளர்களிடமும் அவர் மனதில் உள்ள கேள்விகளை இன்றைய தினம் கேட்பார் என தெரிகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரம் போட்டியாளர்கள் யாருக்கும் ஜெயில் தண்டனை இல்லை என்பதை அறிவிக்கிறார் கஸ்தூரி. ஆனால் புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் ஹவுஸ் மேட் , கஸ்தூரிக்கு புதிய பவர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் யாருக்கு குடை பிடிக்க சொல்கிறாரோ அவருக்கு குடை பிடிக்க விடும், அவர் சொல்லும் நபர் தோப்பு கரணம் போட வேண்டும் மற்றும் தலைகீழாக நிற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தர்ஷன் எங்கு சென்றாலும் அவருக்கு குடை பிடிக்க வேண்டும் என்கிற டாஸ்கை கொடுத்துள்ளார் கஸ்தூரி. இதை தொடர்ந்து ஷெரீனுக்கு, தோப்பு காரணமும், சாக்ஷியை தலை கீழாகவும் நிற்க வைத்து, முதல் நாளே தன்னுடைய பவரை யூஸ் பண்ணி பற்ற போட்டியாளர்களை பாடாய் படுத்தியுள்ளார் கஸ்தூரி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.