என் கணவர் பா.ஜ.கவில் இருந்திருந்தால் பூரி கட்டையால் அடித்து மண்டையை உடைச்சிறுப்பேன்...! கோவத்தின் உச்சத்தில் பிக் பாஸ் ஆர்த்தி...!

 
Published : May 26, 2018, 05:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
என் கணவர் பா.ஜ.கவில் இருந்திருந்தால் பூரி கட்டையால் அடித்து மண்டையை உடைச்சிறுப்பேன்...! கோவத்தின் உச்சத்தில் பிக் பாஸ் ஆர்த்தி...!

சுருக்கம்

big boss arthi against bjp for thoothukudi protest

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நடிகை ஆர்த்தி. 

இது குறித்து கூறியுள்ள ஆர்த்தி.. "இந்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குபதிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், கருத்துச் சொல்லறவங்களை வழக்கு போடுவோம்னு சொல்லி மிரட்டுறதெல்லாம், எத்தானை நாளைக்கு பண்ணுவார்கள் என்று பார்க்கலாம்.... என கேள்வி எழுப்பி உள்ளார்.  

நான் ஆதிமுக வில் இணைந்ததே அம்மாவோட குணம், ஆளுமை, தைரியத்தைப் பார்த்து தான். அவங்க எப்போது மறைஞ்சாங்களோ, அப்போவே நானும் அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டேன்.

ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகை தூத்துக்குடி விஷயம் குறித்து பேசினால் வழக்கு போடுறீங்க, பெரிய ஆட்கள் எத்தனையோ பேர் இது குறித்து பேசி இருக்காங்களே அவங்கமேலையும் வழக்கு போடுங்கள் என்று மிகவும் கோவமாக கூறியுள்ளார்.

மேலும் தற்போது என்னுடைய கணவர் கணேஷ் மட்டும் பா.ஜ.கவில் இருந்திருந்தால், பூரி கட்டையால் அவருடைய மண்டையை அடிச்சு உடைச்சிறுப்பேன்.

ஆனால் என்னை மாதிரியே அவரும் தற்போது எந்த கட்சியிலும் இல்லை என்றும், முன்பு பாரதிய ஜனதா கட்சியில் கணேஷ் இருந்தது உண்மை தான் ஆனால், அந்த கட்சியின் செயல் பாடுகள் பிடிக்காததால் ஒதுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்" ஆர்த்தி. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு